கோயம்பேடு என் வீட்டில் இருந்து கிண்டியில் உள்ள அலுவலகத்திற்கு
சென்று கொண்டிருந்தேன்.வீட்டில் இருந்து கிளம்பும் போதே
எதிரில் குப்பை வண்டியை தள்ளி கொண்டே ஒரு ஆணும் பெண்ணும் வந்து
கொண்டிருந்தனர்.அந்த வண்டியிலேயே ஒரு சிறிய
தொட்டி அதில் அவர்களின் குழந்தை தூங்கி கொண்டிருந்தது.பார்த்து
கொண்டே கோயம்பேடு மேம்பாலத்தை வந்தடைந்து
ஏறுகையில் கீழே உள்ள திறந்த வெளியில் சுமார் முப்பது பேர்.டிராபிக் யில்
புத்தகம்,விசிறி,இதர பொருட்கள் விற்பது அவர்கள்
தொழில்.அந்த திறந்த வெளி தான் அவர்களின்
சமையலறை,படுக்கையறை,கழிப்பிடம்..எல்லாமே ஒரே இடத்தில்...arun excello
விளம்பரத்தில் வருவது போல..எல்லாமே ஒரே இடத்தில்..காண
பொறுக்கவில்லை...நூறு அடி ரோடு முழுவதும் மெட்ரோ ரயில்
வேலை.இங்கிருக்கும் தொழிலாளிக்கு 350 ௦ ரூபாய் தின கூலி கட்டுபடி
ஆகாததால் பீகார் மாநில மக்களுக்கு ரூபாய் 100 தந்து வேலை
வாங்கி கொண்டிருக்கிறார்கள்.இந்த நூறு ரூபாயில் சாப்பிட்டு சேமித்த பணம்
இவர்கள் குடும்பத்திற்கு..அசோக் நகரை தாண்டும்
போது திரும்பவும் ஒரு திறந்த வெளி.சில குறவ மக்கள்.நான்கு பூட்டப்பட்ட
கடைகள்.௦ வாசலிலேயே மூட்டை முடிச்சுக்கள்,அடுப்பு,சமையல்.மனதில்
ரணத்துடன் கடந்து கொண்டிருந்தேன் சைதாபேட்டை பாலத்தை.மூடி
இருக்கும் காரின் உள்ளே என் மூக்கை மூட வைக்கும் அதீத துர்நாற்றம் வீசும்
குப்பை மண்டி.குப்பைகளை தள்ளி கொண்டிருந்தனர் சிலர்,குப்பைகளை
ஒருமித்தபடி கிரேனை இயக்குகிறார் ஒருவர்.அருகிலேயே பல வீடுகள்.பொது
கழிப்பிடம்.அதன் வாசலிலேயே தோசை வியாபாரம்
செய்யும் பெண்.கிண்டியை சென்றடைந்தேன்.
எத்தனை கஷ்டங்கள் .....நமக்கும் கீழே உள்ளவர் கோடி என நினைத்து பார்த்து
நிம்மதி நாட முடியவில்லை.நமக்கு மேல்
உள்ளவர்களை நினைக்கவே தோன்றவில்லை.பத்து தலைமுறைக்கு சொத்து
சேர்த்து கொண்டு,பப்ளிசிட்டிக்கு ஒரீரு உதவி
செய்பவர்கள்.மத்திய அரசுக்கு ஜனாதிபதி போட்டி,இலாகா மாற்றத்திற்கு தான்
நேரம் சரியாக இருக்கிறது.மாநில அரசு இலவச
பொருள் விநியோக விரும்பி,சாப்பாடிற்கே வழி இல்லாதவர்களுக்கு இலவச
டிவி,லேப்டாப் தருவது அவர்களின் பொழுது
போக்கு.சினிமாகாரர்களின் NGO களின் நிலை பற்றி கருத்து கூற
விரும்பவில்லை.படித்த அரசியல்வாதிகளை கை விட்டு
எண்ணிவிடலாம்.அவர்களால் இந்நாட்டில் ஏற்பட்ட மாற்றத்தை எண்ண
முடியாது.ஏனெனில் எந்த மாற்றமும் நிகழவில்லை.ஆனால் நம்மால் நிச்சயம்
ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வர முடியும்.
தேவையற்ற எந்த பொருளும் வீட்டில் இருக்க கூடாது.நமக்கு அவசிய
படாதது அவர்களுக்கு அத்தியாவசியம்
ஆகலாம்.இறந்தவர்களின் நினைவஞ்சலிக்கும்,பிறந்த நாள் விழாக்களுக்கும்
banner வைப்பதை விட்டுவிட்டு பத்து பேருக்கு சாப்பாடு
வாங்கி தரலாம்.இப்படி எத்தனையோ
செய்யலாம்.பிச்சை அளிக்க வேண்டாம்.பகிர்ந்து கொள்ளலாம்.மனித நேயம்
ஒரு சாதாரணமான ஒருவிஷயம்,சாதனை
அல்ல.இயல்பாக இருக்க வேண்டிய ஒன்று,அதை நம் வழக்கம் ஆக்கி
கொள்ளவோம்.
இந்தியா நிச்சயம் ஒரு நாள் விடுதலை பெரும்,வறுமையில் இருந்து.
அதே வேதனையுடனும், கனவுகளுடனும் ...
ReplyDeleteNalla thoru pathivu vanakkam.
ReplyDelete