Tuesday, January 17, 2012

நர்த்தனமும் நவரசமும்


சென்னை எங்கள் நாட்டிய மேடை.

அனுதினம் நாங்கள் ஆடும் நாட்டியங்கள்.


அதில் கலந்திருக்கும் நர்த்தனமும் நவரசமும்.


எங்கள் நவரசம்..
....

உயர்ந்து நிற்கும் கட்டிட MALL களை கண்டு அதிசயித்து கொண்டிருக்கையில் 'ஆச்சரிய'ப்பட வைக்கிறது பறக்க இருக்கும் மெட்ரோ ரயில்கள்.


கழிவு நீர் கலந்து வழி நெடுக ஓடும் தண்ணீரில் காணாத 'அருவருப்பு' குடித்து விட்டு பாதையில் வீழ்ந்து கிடக்கும் மனிதர்கள் மீது.


ஏறும் தங்க விலை கண்டு எந்த 'பயமும்' எங்களுக்கு இல்லை.நாங்கள் மதிப்பது விலை மதிப்பற்ற சில விஷயங்களை மட்டுமே.


Ambulance என்று தெரிந்தும் வழி விடாமல் வெட்டி முறிக்க சென்று கொண்டிருப்பவர்,signalலில் கூட horn வாத்தியத்தை இசைத்து கொண்டிருப்பவர்.அதே தெருவில் சாப்பாடிற்கே வழி இல்லாத பல குடும்பங்களை வைத்து கொண்டு ,அடிக்கடி லட்சங்கள் பல செலவு செய்து நடத்தும் கோவில் திருவிழாக்கள்.தேவையற்ற வெட்டி விளம்பர போஸ்டர்கள்,bannerகள்.தேர்தலின் போது மட்டும் தலை காட்டும் வெள்ளை வேட்டி மனிதர்கள்.எங்களை 'கோபப்பட' வைக்கிற லிஸ்ட் கொஞ்சம் நீளம் தான்.


அடிக்கடி தலையில் பூச்சூடி கொள்வதில் மகிழ்ச்சி மட்டுமல்ல 'கருணை'யை உழைப்பிற்கு காண்பித்த நிம்மதியும் சேர்ந்து கொள்கிறது.


தன்மானம்,தன் குடும்பம் இவற்றிற்கு தடங்கல் வந்தால் எங்களின் 'வீரம்' நிச்சயம் வெளிப்படும்.மேற்கோளில் ஒருவர் Marinaவில் நின்று கொண்டிருக்கும் கண்ணகி.


எங்கள் பாரதியின் கொள்ளு பேரனையே ஜாதி கேட்டு சேர்த்து கொள்ளும் கல்வித்தளங்களை எண்ணி வேதனையுடன் 'வெட்க'ப்பட்டு கொள்கிறோம்.

கடவுள் எங்களுக்கு அளித்த சிறந்த ஆயுதம் 'சாந்தம்'.பயன்படுத்தும் தருணமும் அளவும் எங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்துகிறது.

நகைகளும் புடவைகளும் தரும் சந்தோஷம் நிமிடங்களுக்கு தான்..எங்கள் 'பேரானந்தம்' எங்கள் குழந்தையின் வெற்றியில் மட்டுமே.


... நாங்கள் இந்த மாநகரத்தின் தமிழச்சிகள்.