Friday, May 18, 2012

குரு பெயர்ச்சி


குரு பெயர்ச்சி - 17.05.2012

கடந்த ஒரு பத்து நாளாக என் வீடு சுற்றி இருக்கும் தெருவெங்கும் ஒரு மஞ்சள் தாள் வட்டம் அடித்து கொண்டிருந்தது.அது குரு பெயர்ச்சி பரிகார பலன் மற்றும் கட்டண விவரங்கள்.அதில் இருக்கும் பன்னிரண்டு ராசிகளில் பத்து ராசிக்கு பரிகாரம் உண்டு என்றும், குறைந்த பட்ச கட்டணம் ரூபாய் 125 என்றும் குறிப்பிட பட்டு இருந்தது.நான் போட்ட குறைந்த பட்ச கணக்கில் வந்த லட்சங்கள் சில.இப்படி பல கோவில்கள்..பல மஞ்சள் தாள்கள்...

நான்கைந்து தடவை வந்து கேட்டும் அந்த குறைந்தபட்ச கட்டணத்தை கூட நான் குடுக்கவே இல்லை.என் பரிகாரத்தை சற்று மாறுதலாக செய்தேன். அதே கட்டணத்தில் பென்சில்,நோட்டு புத்தகங்கள் வாங்கி என் வீட்டில் வேலை பார்பவரின் குழந்தைகளுக்கு குடுத்து விட்டேன்.இந்த 'MODERN' பரிகாரத்திற்கு 'SELF SATISFACTION' இலவசமாக  கிடைத்தது.

அந்த மஞ்சள் தாளுக்கு மொய் எழுதியவர்களுக்கு சொல்லி கொள்வது இது தான்..
காலம் மாறி விட்டது.ஆன்மிக 'ஆதின' போலி சாமியார்கள் மற்றும் இப்படி அரசு கோவில்களுக்கே காசு collect செய்யும் ஆசாமிகள் என்று பலர் கிளம்பி  விட்டனர்.மாறாமல் இருப்பது கடவுளும்,நம் பக்தியும் தான்.நாம் உழைத்த காசு இன்னொரு உழைப்பாளிக்கு தான் போய் சேர வேண்டும்.

இதோ என் கனவு குரு பெயர்ச்சி பரிகார பலன்:

ராசி வாரியாக அல்ல...காசு வர்க்கத்தின் வாரியாக... 

பெரும் பணக்காரர்கள் : இலவச ஸ்கூல் ஆரம்பிக்கவும்.

பணக்காரர்கள் : நான்கு நன்றாக படிக்க கூடிய மாணவர்களை படிக்க வைக்கவும்.

நடுத்தர ஆசாமிகள் : நோட்டு புத்தகங்கள் வாங்கி குடுக்கவும்.  படித்தவர்கள் ஓரிரண்டு குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லி தரவும்.

நடுத்தரதிற்கும் கீழ் உள்ளோர்: தங்களின் குழந்தைகளை அவசியம் படிக்க வைக்கவும். 
-------------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு 1 : காசு வைத்து கொண்டு உதவாதவன் தான் 'ஏழை'. அவன் மனிதர்கள் list யில் இல்லை.

பின்குறிப்பு 2: நான் நாத்திக பெண்மணி அல்ல :)

16 comments:

  1. மிக குறைவாக எழுதினாலும், சுவையாக உள்ளது உங்கள் பதிவு.

    ReplyDelete
  2. அருமையான வார்த்தைகள். அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்றும் கூட. இன்று தங்கள் வலைப்பதிவை பற்றி விகடன் மூலம் தெரிந்துகொண்டேன்.
    வாழ்த்துக்கள்.
    - சுந்தர்
    OnlySuperstar.com

    ReplyDelete
  3. Great thoughts and lively writing... Keep it up Ramya..I happened to see in Vikatan..Proud of you!!

    ReplyDelete
  4. Ramya,
    Read this article in Vikatan. Too good! Really appreciate your thoughts..and how you have presented it.!!Felt like reading my own diary in the last few lines of Parigaara Palan-:)

    ReplyDelete
  5. Miga arumaiyana unmaiyana thagavalgal ..nandri ungalukum & vikatan.. maravendiya samuthayam ..marum oru naal

    ReplyDelete
  6. Racist, : they are killing our community., your ideology is too different; that I'm not like you, . after your marriage will u wear thali < NOTE : .iam not hurting u >

    ReplyDelete
  7. சிறந்த கட்டுரை. மிகவும் சுவாரஸ்யமான வரி
    "இந்த 'நவீன' பரிகாரத்திற்கு 'SELF SATISFACTION' இலவசமாக கிடைத்தது"

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete