Friday, January 7, 2011

அம்மா


அம்மா - இவ்வார்த்தையை ஆயிரம் முறை சொல்லிருக்கிறேன்..பிறர் கூற கேட்டும் இருக்கிறேன்..இன்று மட்டும் என் மகள் கூற கேட்கும் போது சற்று மாறுபட்டு தோணுகிறதே? அப்படி என்ன இருக்கிறது இந்த 'அம்மா'வில்? அதுவும் மற்ற உறவுகளை போல ஒரு உறவு.அவ்வளவு தானே? அப்பா கூடத்தான் நாள் முழுவதும் உழைக்கிறார்.சகோதரி கூடத்தான் நாளெல்லாம் உயிர் தோழியாய் இருக்கிறாள்.அண்ணன் தம்பியிடம் மட்டும் பாசத்திற்கு குறைவா என்ன? அப்புறம் ஏன் அம்மாவுக்கு முதன்மை பட்டம் ?
அன்று புரியவில்லை. cricket பார்த்து கொண்டே 'பசிக்குது அம்மா' என்று சொல்லி முடிப்பதற்குள் சுட சுட ரசசாதமும், உருளைகிழங்கு வறுவல் என் முன்னே இருக்கும். 'தின்பது' முதல் 'திருமணம்' வரை என் விருப்பம் தான் என் அம்மாவின் விருப்பம். 'இவ்ளோ தூரமா படிக்க அனுப்புவாங்க? ' என்று ஊரே கேட்கும் போதும், நான் ஒவ்வொரு முறை கல்லூரிக்கு செல்லும் போதும் சிரித்து கொண்டே வழி அனுப்புவார் என் அம்மா.ஆனாலும் இதெலாம் அவர் கடமை அல்லவா? இதற்காக first rank கொடுத்து விட முடியுமா என்ன?அன்று புரிய வில்லை.
இன்று கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்கிறேன்.
என் மகள் மூலமாக...
ஐந்தாறு அடி அடித்தாலும் அழுது கொண்டே என்னை பிடித்து கொண்டு அவள் உறங்கும் போதும்..
தயிர் சாதமே ஆனாலும் என் கையால் தரும்போது இரண்டு வாய் அதிகமாக அவள் சாப்பிடும் போதும்...
வெளியில் சென்று திரும்பும் என்னை பார்க்க 'ஈ ஈ ' என்று இளித்து கொண்டு ஓடி வரும் அந்த கன்னக்குழி சிரிப்பு என் முதலிடத்தை எனக்கு புரிய வைத்து விட்டது.
இப்போதுதான் புரிகிறது
என் அம்மா அவர் அம்மா விடம் ஒரு நாளைக்கு தொலைபேசியில் 20 தடவையாவது ஏன் பேசுகிறார் என்று....
இப்போதுதான் புரிகிறது
என் கணவர் ஏன் நான் எவ்வளவு ருசியாக சமைத்தாலும் 'என் அம்மா செய்றதுல உப்பு காரம் எல்லாம் கரெக்டா இருக்கும்' என்று சொல்கிறார் என்று...
இப்போதுதான் புரிகிறது
என் அப்பா தன் பேத்தியை தன் அம்மா பேரை சொல்லி ஏன் அடிக்கடி அழைக்கிறார் என்று...

இவ்வளவு ஆராய்ச்சிகள் செய்து நான் என் அம்மாவிற்கு கொடுத்துளேன் 'முதன்மை இடம்'.எத்தனை ஆராய்ச்சிகள் செய்திடினும் அம்மா HOLDS THE FIRST RANK IN EVERYONE'S LIFE.

14 comments:

  1. super ramya....amma always takes the first position in life.....

    ReplyDelete
  2. very touching di.. too good...

    ReplyDelete
  3. i've become a fan :p of ur blog di.. waiting for more posts to come :)

    ReplyDelete
  4. I managed to read tamil with some difficulty but at the end I was very pleased that I did. Your post is very touching. Keep up the good work!

    ReplyDelete
  5. that is nice and touching.

    paul.st.andre

    ReplyDelete
  6. Good work, through your child you come to know the importance of your MOM. Infact everyone realise thier parents importance through thier child only. When we grow we never think about our parents and we always says it is thier duty or thier responsibility. We never thought about thier real love behind that. We realise only when we reciprocate to our child. Good work and waiting for write up about Father. Because I am always 50/50 for DAD and MOM.

    ReplyDelete
  7. it touched and moved me and i was running out of words when i finished it... i love this because its abt the one relation that i love and adore the most in my whole life.. way to go gal...

    ReplyDelete
  8. Though it was difficult to read again Tamil after years being cut off, I was moved and touched by this lovely speech of praise.

    ReplyDelete
  9. எழுதுவது உங்கள் தொழில் இல்லை என்று நீங்கள் சொன்னாலும் ரொம்பவும் professional ஆக எழுதுகிறீர்கள். nice.

    ReplyDelete
  10. இனி(ய) நண்பரே, இணைய நண்பரே,

    அன்பானவர்களை இனிய நண்பரே என்று அழைப்பதே சரி.
    ஆனந்த விகடன் மூலமாக உங்கள் வலைப்பூவை அறிந்தேன். அழகான பூவைப்போல் உள்ளது உங்கள் வலைப்பூ. பூக்கள் எல்லாமே அழகுதான். அம்மாவைப் பற்றிய உங்கள் வலைப்பூவைப்பற்றி ஒரு குறை இருக்கின்றது. அதாவது பாதி பதிவுதான் தெளிவாக இருக்கின்றது. மீதி எழுத்துக்கள் தெளிவாக தெரியவில்லை, ஒரே மங்கலாக இருக்கிறது.
    ஓ மன்னித்துவிடுங்கள், குறை உங்கள் பதிவில் இல்லை. குறை என்னிடம்தான், பாதி பதிவைப் படித்த உடன் விழியோரம் உருவான கண்ணீர் கண்களை மறைத்ததால்தான் மேற்கொண்டு படிக்கமுடியவில்லை என்று உணர்கிறேன்.
    பதிவு மிக நன்றாக இருக்கிறது. நவீன உலக வாழ்க்கை மனிதர்களின் மனதை மரத்துப் போக செய்துவிடுகிறது. அப்படி மரத்துப் போன மனதை மயிலிறகு கொண்டு வருடியதுபோல் உள்ளது.
    ஒவ்வொருவரும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, ஒரு குழந்தைக்கு பெற்றோராகும் போது முன்னெப்போதும் விட அதிகமாக அவர்களின் தாய் தந்தையை நினைப்பார்கள்.

    புதிய தலைமுறை புத்தகத்தில் என்று நினைகிறேன், எழுத்தாளர் பிரபஞ்சன் (என்று நினைகின்றேன்), தனது மனைவியைப் பற்றி சில வார்த்தைகள் கூறி இருப்பார் “பல்வேறு திறமைகள் இருந்தும், சுதந்திர வானில் சிறகடித்துப் பற்றக வேண்டியவர், எனக்கு வாழ்க்கைப்பட்டு, என் நிழலுக்குள்ளேயே இருந்து, தன் தனித்துவத்தை இழந்து, என் வாழ்க்கைக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டார்”. என்று கூறியிருந்தார். (படித்து நாளாகிவிட்டது சிறிது மாறியிருக்கலாம்).
    அம்மா, ஏன் சிறப்பு, கையில் சிறிது பளுவாக இருக்கும் பொருளை சட்டென்று கீழே வைத்துவிடுகின்றோம். ஆனால் அம்மா 10 மாதங்கள் நம்மை தமது கருவறையில் சுமக்கின்றார், ஈன்ற பின்னும் தன்னுடைய கையில் சுமக்கின்றார்.
    மனிதர்கள் அம்மாவை நினைப்பது ஏன் என்றால் மனிதனைப் படைத்த கடவுளும் அம்மாவைத்தான் விரும்புகிறார். கடவுள் இருக்க விரும்புவதும் ”கருவறையல்லவா”.
    மிகவும் சிறப்பாக இருக்கிறது உங்கள் பதிவு.
    பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

    பாலாஜி சுந்தர்,
    picturesanimated.blogspot.com

    ReplyDelete